Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / கொரோனா – பிரான்ஸ் முதன்மை அமைச்சரின் கருத்துக்கள்.

கொரோனா – பிரான்ஸ் முதன்மை அமைச்சரின் கருத்துக்கள்.

நிலைமைகள் மெதுமெதுவாக முன்னேற்றம் கண்டு வந்தாலும், நெருக்கடியில் இருந்து வெளியேறவில்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர் எடுவார்ட் பிலிப், வைரசுடன் நீண்டகாலத்துக்கு வாழப்பழகிக் கொள்ள வேண்டிய கட்டத்துக்கு நாம் வந்துள்ளோம், மே 11 க்கு பின்னர் கடைப்பிடிக்க வேண்டிய செயற்பாடுகள், அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கான முக்கியசெய்திகளைச் சுகாதாரத்துறை அமைச்சர் ஒலிவியே வெறான்வுடன் இணைந்துஊடகங்களுக்கான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தடுப்பு மருத்து கண்டு பிடிக்கா நிலையிலும், முறையான சிகிச்சை முறை இனங்காணப்படாத நிலையிலும், முன்னரைப் போன்றதொரு நிலைமை உடனடிச்சாத்தியம் இல்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர் 2 இருந்து 6 மில்லியன் பிரென்சு குடிமக்களில் வைரஸ் தொற்று உள்ள தென்ற மதிப்பீட்டினைச் சுட்டிக் காட்டி, இதன் ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு தற்காப்பு முறைகளே தற்போதைய நிலை எனத் தெரிவித்திருந்தார்.

பொது முடக்கத்தில் இருந்து வெளியேறுதல், பாடசாலை திறப்பு, சுகாதார நெருக்கடி, பொருளாதார வீழ்ச்சி என பல்வேறு விடயங்கள் தொடர்பில்அரசாங்கத்தின் நிலைப்பாடுகள், செயற்பாடுகள் தொடர்பில் இருவரும்எடுத்துரைந்திருந்தனர்.

மே 11ம் திகதி, அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படமாட்டது. அனைத்து மாணவர்களுக்கும் சமவேளையில் பாடங்கள் நடத்தபடமாட்டாது. கிழமை விட்டு கிழமை என சுகாதார, தற்காப்பு, பாதுகாப்பு ஆகிய விடயங்களை கவனத்தில் கொண்டு கல்விச் செய்பாடுகள் அமைந்திருக்கும்.

பொதுப் போக்குவரத்துகளில் முகக் கவசம் கட்டாயமாக்கப்படுகின்றது. நெருக்கடிகளை குறைக்கும் வகையில் இயன்ற வரை வீடுகளில் இருந்து வேலை செய்யக் கூடியவர்கள் வேலை செய்யக் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

தொற்று அடையாளம் காணப்பட்டவர்கள் வீடுகளிலோ அல்லது விடுதிகளிலோ தனிமைப் படுத்தப்படுவார்கள். தற்போது நாளொன்று வைரஸ் தொற்றினை இனங்காணும் சோதனைகள் 25 000ஆக உள்ளது. மே மாத பகுதியில் இது வாரத்துக்கு 500 000 ஆக உயர்கின்றது.

– பிரான்சில் உள்ள மூதாளர் இல்லங்களில் 45 வீதமானவை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் மூதாளர் இல்லங்களில் உள்ள மூத்தோரைஅவர்களது குடும்ப உறுப்பினர் இருவர் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்படுகின்றது. மூதாளர் இல்லத்தின் பொறுப்பதிகாரியின் வழிகாட்டுதலுக்கு அமைய, கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய சந்திப்புகள்அமையும்.

(பிரான்சில் 7 500 மூதாளர் இல்லங்கள் இருப்பதோடு, அண்ணளவாக 7 இலட்சம்பேர் பாராமரிக்கப்பட்ட வருவதோடு, இது வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குஇலக்காகி 7800 பேர் பலியாகியுள்ளனர்.)

– தற்போது வாரத்துக்கு 45 மில்லியன் முகக் கவசங்கள் தேவையாகவுள்ளது. வாரத்துக்கு 8 மில்லியன் பிரான்சில் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், மிகுதி தேவையினை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

– யூன் மாத பகுதியில் பிரான்சிடம் 15 000 செயற்கை சுவாச வழங்கிகளும், மேலதிகமாக 15 000 நடமாடும் செயற்கை சுவாச வழங்கிகளும் கையிருப்பில் இருக்கும்.

– சுகாதாரப் பிரிவினர் கேட்டுக் கொண்ட சுவாசக் கவசங்களுக்கான நெருக்கடி ஓரளவு தீர்க்கப்பட்டள்ளது. மேலும் கையுறைகள், தற்காப்பு உடைகளுக்கான நெருக்கடி காணப்படுகின்றது. சுகாதாரத் துறை கேட்கின்ற எல்லாவற்றையும் உடனடியாக நிவர்த்தி செய்ய முடியாத போதும், எமது அதி உச்ச இராஜதந்திர செயற்பாட்டு முறையில் இறக்குமதி செய்து கொடுத்து வருகின்றோம்.

– தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான மருந்துகள் பெரும் பற்றாக்குறையாகவுள்ளது. கோமா நிலையில் உள்ளவர்கள், நீண்ட காலத்துக்கு சிகிச்சைக்கு உட்படுத்தவேண்டியவர்களுக்கான பல மருந்துகள் தட்டுப்பாடாகியுள்ளது. உலக அளவில் 2000 மடங்கு தேவை ஏற்பட்டுள்ளமையே இதற்கு காரணம். இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சரிடம் இது பற்றி கதைத்துள்ளோம். தற்போது இந்தியா நமது தேவைகளை நிவர்த்தி செய்ய முன்வந்துள்ளது.

– எதிர்வரும் கோடையில் மனிதர்களிடத்தில் தடுப்பு மருந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. 1 வருடத்தில் அச்சோதனைகள் முழுமை பெறும்.

– கோடை விடுமுறைக்கு செல்ல முடியுமா என்ற கேள்விக்கு பதில் இல்லை. ஆனால் சுற்றுலாவுக்கு வெளி நாடுகளுக்கு பயணம் செய்வது என்பது உடனடிச் சாத்தியம் இல்லை. குறைந்த பட்சம் 200 பேருடன் ஒரு குடும்ப கொண்டாடங்களை நடத்தது என்பதெல்லாம் முடியாத காரியமாகவே இருக்கும்.

– உணவகங்கள், குடிப்பகங்கள் உடனடியாக திறக்க முடியாத நிலை காணப்படுகின்றது. பிற நிறுவனங்களுக்கு சமூக இடைவெளி, வரிசைக் கிரமமாக உட்செல்ல முடியும். ஆனால் உணவகங்களிலோ, குடிப்பகங்களிலோ முகக்கவசம், கையுறைகளுடன் சாத்தியம் இல்லை.

– மே 11 க்கு பின்னர் மூதாளர் வெளியில் செல்லலாம். ஆனால் முறையான பாதுப்பு இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளுதல் என்பது பிறரையும் சேர்த்து பாதுகாத்துக் கொள்வதற்கு சமம்.

– நாட்டின் பொருளாதாரம் 2020ம் ஆண்டில் 8 வீதத்தினால் வீழ்ச்சி காண்கின்றது.

இவ்வாறு பல்வேறு விடயங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமரும், சுகாதாரத்துறை அமைச்சரும் எடுத்துரைத்தனர்.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *