Breaking News
Home / உலகம் / கோவிட்-19: உலகளாவி மறைந்திருக்கும் பேராபத்து.

கோவிட்-19: உலகளாவி மறைந்திருக்கும் பேராபத்து.

எப்படா இந்த கோவிட்டார் மறைந்து போவார் என்ற அங்கலாய்ப்பு எங்கும் அதிகரித்து வருகிறது. வீட்டுக்குள் முடங்கியது போதும் விடுங்கடா வெளியே எனஉள்ளிருந்து ஒரு அசரீதி உங்களை உலுப்புகிறது. ஆனால் கோவிட்டார் தாக்கம் எந்தளவிற்கு உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இன்னும் பலஇடங்களில் அதன் தாக்கம் கண்டறியப்படாமலே விசுவரூபம் பெறுகிறது என உங்களுக்கான தரிசனப் பார்வையைத் தருவதற்கான ஒரு முயற்சி இங்கே. உலகின் சனத்தொகையில் முதல் இருபது இடங்களில் உள்ள நாடுகளில்கோவிட்-19 நிலைமை எவ்வாறு என்று பார்ப்போம்.

இதில் அவர்கள் சனத்தொகை என்ன? அடுத்து அவர்கள் நாடுகளில் மில்லியன்பேரில் எத்தனை பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று சோதனை செய்யப்பட்டுள்ளது ? என்ற விபரம். இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டியது சோதனைகள் குறைந்த நாடுகளில் நோய்த் தொற்றின் எண்ணிக்கை குறைவாகஇருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். சோதனைகள் குறைவாக செய்யும் போதுஎவ்வாறு எவ்வாறு நோய்த்தொற்றுப் பரம்பலைக் கண்டறிய முடியும்? இதில் 11 நாடுகள் மில்லியனில் ஆயிரம் பேருக்கான சோதனை இலக்கையே இது வரை எட்டவில்லை என்பது பேரச்சம் தருகிறது. இருக்க சீனா மற்றும் கொங்கோ போன்ற நாடுகளில் இது குறித்த தரவையே பெற முடியவில்லை.

அடுத்து அடைப்புக் குறிக்குள் அந்நாடுகளில் இதுவரை நோய்த் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தரப்பட்டுள்ளது. இறுதியாக அந்நாடுகளில் ஒரு சதுர கிலோ மீற்றரில் எத்தனை பேர் வதிகின்றார்கள் என்றஎண்ணிக்கை தரப்பட்டுள்ளது. இவ் எண்ணிக்கை அதிகரிக்கும் போது நோய்த் தொற்று அபாயமும் அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொண்டு இவ்வெண்ணிக்கையை கவனத்தில கொள்ளவும். அதிலும் சில நாடுகளில் பெரும்நிலப்பரப்பு மக்கள் பாவனையில் இல்லை என்பதுவும் இவ்வெண்ணிக்கையில் தாக்கத்தை செலுத்த வல்லது.

இதில் பிறேசில் மற்றும் ரஸ்சியா உடனடி அபாய நிலையை நோக்கி வேகமாக நகருகின்றன. சீனா அமெரிக்கா யப்பான் ஈரான் ஜேர்மனி நீங்கலாக இது வரை பெரும் கவனத்தை ஈர்க்காத ஏனைய நாடுகள் பலதிரை மறைவிலான பெரும் ஆபத்தில் உள்ளன. இவ்வாறான நாடுகள் பேராபத்து ஒன்றை கோவிட் சார்ந்து எதிர் கொள்ளும் நிலை எவ்வாறு உள்ளது என்பதை அவற்றை ஒவ்வொன்றாக கவனத்தில் கொள்ளும்போது தொடர்ந்தும் பார்ப்போம்.

  1. சீனா – 143.93 கோடி மக்கள், — சோதனைகள் மில்லியன் பேருக்கு, (82,747 நோய்த்தொற்றாளர்கள்), 153 பேர் ஒரு சதுர கிலோ மீற்றருக்கு
  2. இந்தியா – 138 கோடி மக்கள், 297 சோதனைகள் மில்லியன் பேருக்கு, (17,615 நோய்த்தொற்றாளர்கள்), 464 பேர் ஒரு சதுர கிலோ மீற்றருக்கு
  3. அமெரிக்கா – 33.1 கோடி, 11,812/1M pop (7,64,265 cases), 36 P/Sq.Km
  4. இந்தோனேசியா – 23.35 கோடி, 154/1M pop, (6,575 cases) 151 P/Sq.Km
  5. பாக்கிஸ்தான் – 22.09 கோடி, 455/1M pop, (8,348 cases), 287 P/Sq.Km
  6. பிறேசில் – 21.26 கோடி, 2,266/1M pop, (38,654 cases), 25 P/Sq.Km
  7. நைஜீரியா – 20-61 கோடி, 35/1M pop, (627 cases), 226 P/Sq.Km
  8. பங்களாதேஸ் – 16.47 கோடி, 145/1M pop, (2,456 cases), 1265 P/Sq.Km
  9. ரஸ்சியா – 14.59 கோடி, 13,294/1M pop, (42,853 cases), 9 P/Sq.Km
  10. மெக்சிக்கோ – 12.89 கோடி, 384/1M pop, (8,261 cases), 66 P/Sq.Km
  11. யப்பான் – 12.65 கோடி, 892/1M pop, (10,797 cases), 347 P/Sq.Km
  12. எத்தியோப்பியா – 11.5 கோடி, 66/1M pop, (108 cases), 115 P/Sq.Km
  13. பிலிப்பைன்ஸ் – 10.96 கோடி, 593/1M pop, (6,259 cases), 368 P/Sq.Km
  14. எகிப்த்து – 10.23 கோடி, 560/1M pop, (3,144 cases) 103 P/Sq.Km
  15. வியட்நாம் – 9.73 கோடி, 1,655/1M pop, (268 cases), 314 P/Sq.Km
  16. கொங்கோ – 8.96 கோடி, —/1M pop, (327 cases), 40 P/Sq.Km
  17. துருக்கி – 8.43 கோடி, 7,628/1M pop, (86,306 cases), 110 P/Sq.Km
  18. ஈரான் – 8.40 கோடி, 4,068/1M pop, (82,211 cases), 52 P/Sq.Km
  19. ஜேர்மனி – 8.38 கோடி, 20,956/1M pop, (1,45,742 cases), 240 P/Sq.Km
  20. தாய்லாந்து – 6.98 கோடி, 1,440/1M pop, (2,765 cases), 137 P/Sq.Km

நன்றி : அரசியல் சமூக ஆய்வறிஞர் : நேரு குணரட்னம்.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *