Breaking News
Home / ஈழச் செய்திகள் / சிறீலங்காவில் நாடாளுமன்ற தேர்தல் எதிர் வரும் யூன் 20 ஆம் திகதி.

சிறீலங்காவில் நாடாளுமன்ற தேர்தல் எதிர் வரும் யூன் 20 ஆம் திகதி.

சிறீலங்காவில் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் எதிர் வரும் யூன் மாதம் 20 ஆம் திகதி இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்பிரல் 25 ஆம் திகதி இடம் பெற இருந்த பொதுத் தேர்தல் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலையை அடுத்து பிற்போடப்பட்டு இருந்தது.

பொதுத்தேர்தலை திகதி குறிக்காமல் பிற்போட முடியாது என எழுந்த வாதப்பிரதிவாதங்களை அடுத்து தேர்தல் ஆணைக்குழு பலதரப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்து, எதிர் வரும் யூன் 20 ஆம் திகதி தேர்தல் இடம்பெறும் என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

பொதுத்தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று ஒன்று கூடி கலந்துரையாடியதுடன், பல துறையினர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்டது. பின்னர் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களாக செயற்படும் மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அரச அதிபருடனான கலந்துரையாடலின் பின்னரே மாவட்ட அரசாங்க அதிபர்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தனர்.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *