Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / நாளொன்றுக்கு 500 000 சுவாசக்கவங்களுடன் களமிறங்கும் சீன முதலாளி !

நாளொன்றுக்கு 500 000 சுவாசக்கவங்களுடன் களமிறங்கும் சீன முதலாளி !

கொரோனா வைரஸ் நெருக்கடி நீண்டகாலத்துக்கு நீடிக்கும் என்ற நிலையில், சுகாதாரத்துறையினை நோக்கிய முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதனொரு அங்கமாக Le Blanc-Mesnil பகுதியில் நாளொன்றுக்கு 5 இலட்சம் சுவாசக்கவசங்களை தயாரிக்கும் உற்பத்திசாலையொன்றிக்கு முதலீடு செய்துள்ளார்.

Seine-Saint-Denis பிராந்தியத்தில் உள்ள பெருவாரியான தொழிலகங்கள், நிறுவனங்களின் கட்டிடங்களின் சொந்தக்காரகவும், groupe immobilier Eurasia நிறுவனத்தின் தலைவராக இருக்கின்ற Hsueh Sheng Wang சீன நாட்டவாரே இதனை நிறுவி வருகின்றார்.

சீனாவில் இருந்து மூன்று பெரிய இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட இருப்பதோடு, தொழிலாளர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட இருப்பதாக கூற்ப்படுவதோடு, இல்-டு-பிரான்சின் சுவாசக்கவசங்களின் தேவைகளில் ஒரு பகுதியினை நிவர்த்திசெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தனிவிமானத்தில் 2500 சதுரமீற்றர் மூலப்பொருள் முதல்கட்டமாக வந்திறங்க இருக்கின்றது. 15 தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக வேலைவாய்ப்பினை வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *