Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / கொரொனா வைரஸ் – பிரான்சில் 44,594 பேர் முற்றாகக் குணமடைந்தனர் !

கொரொனா வைரஸ் – பிரான்சில் 44,594 பேர் முற்றாகக் குணமடைந்தனர் !

COVID -19 தொற்று நோய் குறித்து சுகாதார அதிகாரிகள் தெரிவித்த மதிப்பீட்டின்படி, 124,114 தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, வயோதிப பராமரிப்பு உள்ளிட்ட சமூக மற்றும் மருத்துவ-சமூக மையங்களில் 66,500 தொற்றுக்கள்.

மருத்துவமனைகளில் 14,050 மற்றும் வயோதிப பராமரிப்பு உள்ளிட்ட சமூக மற்றும் மருத்துவ-சமூக மையங்களில் 8,564 மரணங்கள் மொத்தம் 22,614 மரணங்கள்.

இன்று ஏப்ரல் 25, சனிக்கிழமை மருத்துவமனைகளில் 24 மணி நேரத்தில் 198 உயிரிழப்புக்களும், வயோதிப பராமரிப்பு உள்ளிட்ட மருத்துவ-சமூக மையங்களில் 171 உயிரிழப்புக்களும் நிகழ்ந்தன. மொத்தமாக 369 இறப்புக்கள்.

வைத்தியசாலை மதிப்பீட்டின்படி கடந்த 24 மணிநேரத்தில் 1,537 பேர் தொற்றுக்குள்ளாகினர்.4,725 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். தொடர்ச்சியாக 17வது நாளாக குறைந்து வரும் எண்ணிக்கை. தீவிர சிகிச்சையில் இன்றைய எண்ணிக்கை 124 பேர், தற்போது 28,222 பேர் மருத்துவமனையில் (24 மணிநேரத்தில் 999 பேர் புதிதாக) அனுமதிக்கப்பட்டுள்ளனர். 44,594 பேர் முற்றாகக் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *