Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் அதிகாலையில் நிகழ்ந்த பாரிய தீவிபத்து !

பிரான்சில் அதிகாலையில் நிகழ்ந்த பாரிய தீவிபத்து !

25/04/2020 அதிகாலை Gennevilliers நகரில் Cité Rouge இல் இடம்பெற்ற தீ விபத்தில் பலர் எரிகாயங்களுக்கு உள்ளாகினர்.14 மாடித் தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் 8 வது தளத்தில் தீ பற்றிக் கொண்டது. தீ வேகமாக பரவ ஆரம்பித்ததும் அருகருகே உள்ள மேலும் இரு கட்டிடங்களும் ஆபத்துக்குள்ளாகி.

அதிகாலை 3 மணி அளவில் தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்னரே காவல்துறையினரால் சுமார் 100 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். பெரும் திரளான கரும்புகை பக்கத்து கட்டிடங்களுக்குள் நுழைந்தது. தீயணைப்பு படையினரும் கட்டிடங்களில் வசித்த பலரை உடனடியாக வெளியேற்றினர். களத்தில் 100 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 20 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தி காலை 5 மணியளவில் தீ அணைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் எட்டுப் பேர் சிறு எரிகாயங்களுக்குள்ளாகினர் மற்றும் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *