Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் உள்ளிருப்புச் சட்டங்களால் பல்லாயிரக்கணக்கானவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் !

பிரான்சில் உள்ளிருப்புச் சட்டங்களால் பல்லாயிரக்கணக்கானவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் !

கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை மதித்து, பிரான்சில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்ததால் 60,000 உயிர்கள் வரை காப்பாற்றப்பட்டதாக ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

பிரான்சில் பொது சுகாதார பள்ளி மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், கொரோனா கட்டுப்பாடுகளை மதித்து பிரான்சில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்ததால் 60,000 உயிர்கள் வரை காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள முடிவுகளுடன் பிரான்ஸ் அரசும் ஒத்துப்போவதாக பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் Olivier Véran தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் மக்களாகிய நாம் உள்ளிருப்புச் சட்டங்களை மதித்து நடந்ததன் மூலம் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளோம் என்று கூறியுள்ள Olivier Véran, சுகாதாரத்துறை, பொது சுகாதார பள்ளி மேற்கொண்ட ஆய்வு முடிவுகளுடன் தாங்களும் ஒத்துப்போகிறோம் என்றார். ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ள இந்த உள்ளிருப்பு கட்டுப்பாடுகளின் வெற்றி, இன்னமும் பல வாரங்கள் கட்டுப்பாடுகளைத் தொடர வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது என்றார் அவர்.

உண்மையில் பொது சுகாதாரப் பள்ளி மேற்கொண்ட ஆய்வு முடிவுகள், ஒரு மாத உள்ளிருப்பு கட்டுப்பாடுகளே 60,000 உயிர்களைக் காப்பாற்றியிருக்க வாய்ப்புள்ளது என்றும், மேலும் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்திருக்கும் பட்சத்தில், ஏப்ரல் 20 நிலவரப்படி மருத்துவமனைகளில் 100,000 படுக்கைகள் தேவைப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளன.கொரோனா தொற்றை எதிர்கொள்ள ஆயத்தமான நிலையிலும், பிரான்ஸ் மருத்துவமனைகளில் 10,000 படுக்கைகள் மட்டுமே காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *