Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் கொரொனா தொற்றிலிருந்து 44,903 பேர் முற்றாகக் குணமடைந்தனர் !

பிரான்சில் கொரொனா தொற்றிலிருந்து 44,903 பேர் முற்றாகக் குணமடைந்தனர் !

பிரான்சில் கொரொனா தொற்று நோய் குறித்து சுகாதார அதிகாரிகளின் மதிப்பீட்டின்படி, 124,575 தொற்ற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளர், வயோதிப பராமரிப்பு உள்ளிட்ட மருத்துவ – சமூக மையங்களில் 67,168 தொற்ற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளர்.

மொத்தம் மரணங்கள் 22,856 (மருத்துவமனைகளில் 14,202 மற்றும் வயோதிப பராமரிப்பு உள்ளிட்ட சமூக மற்றும் மருத்துவ-சமூக மையங்களில் 8,654).

இன்று 2020 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைகளில் 24 மணி நேரத்தில் 152 உயிரிழப்புக்களும், வயோதிப பராமரிப்பு உள்ளிட்ட மருத்துவ-சமூக மையங்களில் 90 உயிரிழப்புக்களும் நிகழ்ந்துள்ளன. மொத்தம் 242 பேர் உயிரிழந்துள்ளர்.

வைத்தியசாலை மதிப்பீட்டின் படி கடந்த 24 மணிநேரத்தில் 461 பேர் தொற்றுக்குள்ளாகினர். 4,682 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். தொடர்ச்சியாக 18 வது நாளாக குறைந்து வரும் எண்ணிக்கை. தீவிர சிகிச்சைப் பகுதியில் இன்றைய எண்ணிக்கை 79 பேரும், தற்போது 28,217 பேர் மருத்துவமனையில் (24 மணிநேரத்தில் 481 பேர் புதிதாக) அனுமதிக்கப்பட்டுள்ளனர். 44,903 பேர் முற்றாகக் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *