Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்ஸ் அரசாங்கத்தின் அவசரப்பட்ட முடிவை எதிர்க்கும் SNCF தொழிற்சங்கங்கள்.

பிரான்ஸ் அரசாங்கத்தின் அவசரப்பட்ட முடிவை எதிர்க்கும் SNCF தொழிற்சங்கங்கள்.

“எதுவுமே தயார் இல்லை, இது மிகவும் அவசரப்பட்ட முடிவு” என SNCF தொழிற்சங்கங்கள், பிரான்ஸ் அதிபரின் மே 11 உள்ளிருப்பு நீக்கலை எதிர்த்துக் குரலெழுப்பி உள்ளன.

“பொதுப் போக்குவரத்துக்களில் முகக்கவசம் அணிவது என்பது மட்டுமே பாதுகாப்பானது அல்ல. எந்த வகை முகக்கவசங்கள் மக்களுக்கு வழங்கப்படவுள்ளன என்பதும் அதன் பாதுகாப்பு எத்தனை வீதம் உறுதிப்படுத்தப்படும் என்பதும் கேள்விக்குறியே. அதனையும் தாண்டி சுகாதாரப் பாதுகாப்பு இடைவெளி என்பது சாத்தியமற்ற விடயம். இதனைத் தயார்படுத்துவது என்பதும் பாரிய வேலையாகும்”

பயணச்சீட்டுக் கண்காணிப்பாளர்கள், பயணச்சீட்டு விற்பனை மையப் பணியாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள், தொழில் நுட்பப் பிரிவினர், தொடருந்து கால அட்டவணைக் கண்காணிப்பாளர்கள், சமிக்ஞைக் கட்டுப்பாட்டாளர்கள் என ஒரு பாரிய தொடரமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கான தயார்படுத்தலென்பது உடனடியாகச் செய்ய முடியாதவை, 90 சதவீதமான தொடருந்துகள் உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுடன், தரிப்பிலேயே வைத்திருக்கப்பட்டுள்ளது. இவற்றை மீண்டும் இயக்கப் பாரிய தொழில் நுட்பப் பணி உள்ளது.

SNCF இல் வெறும் 15.000 பணியாளர்கள் மட்டும் பணியில் இருக்க 140.000 பேர் பகுதி வேலையிழப்பிலோ, மருத்துவவிடுப்பிலோ, அல்லது வீட்டிலிருந்து பணியாற்றும் நிலையிலோ உள்ளனர். இவர்களை ஒருங்கிணைத்து SNCF இயந்திரத்தை இயக்கக் கால அவகாசம் தேவை.

அடுத்த சவாலாக, இது வரை ஒவ்வொரு நாள் சேவை முடியவும் தொடருந்துகள் சுத்திகரிக்கப்பட்டன. ஆனால் இனி மேல் ஒவ்வொரு நாள் இரவும், கிருமி நீக்கம் (désinfecté) செய்யப்படல் வேண்டும். இது எந்த அளவிற்குச் சாத்தியம் என்பது கேள்விக்குறியே, SNCF பணியாளர்களின் பாதுகாப்பையும், பயணிகள் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தாமல், மிகவும் அவசரப்பட்ட தவறான முடிவை அரசாங்கம் எடுத்துள்ளதாக, Unsa Ferroviair, SUD-Rail, CGT, CFE-CGC, CFDT போன்ற பல தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. இது அனைவரின் உயிரோடும் சவால் விடும் விடயமாகும். இதனால் மீண்டும் வேலை நிறுத்தத்தினை SNCF மேற்கொள்ளும் ஆபத்து உள்ளது.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *