Breaking News
Home / உலகம் / ஊரடங்கு உத்தரவு – தமிழகம் முழுவதும் 3 இலட்சத்துக்கு மேற்பட்டோர் கைது.

ஊரடங்கு உத்தரவு – தமிழகம் முழுவதும் 3 இலட்சத்துக்கு மேற்பட்டோர் கைது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முகமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறியதாக இது வரை 3 இலட்சத்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கை மீறி அநாவசியமாக வெளியே உலாவித் திரிபவர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வரை 144 தடையை மீறியது தொடர்பாக 3 இலட்சத்து 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3 இலட்சத்து 34 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், 2.84 இலட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விதி மீறலில் ஈடுபட்டவர்களிடமிருந்து இது வரை 3.33 கோடி ரூபாய் அபராதம் அறவிடப்பட்டுள்ளது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *