Breaking News
Home / உலகம் / “வரனே அவஷ்யமுண்ட்” திரைப்படக் குழுவினருக்கு தமிழ்த் தேசியக் கலைஞர்களின் வன்மையான கண்டனமும் எச்சரிக்கையும் … !

“வரனே அவஷ்யமுண்ட்” திரைப்படக் குழுவினருக்கு தமிழ்த் தேசியக் கலைஞர்களின் வன்மையான கண்டனமும் எச்சரிக்கையும் … !

“வரனே அவஷ்யமுண்ட்” (Varane Avashyamund” திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் தொடர்புடைய பணிக்குழுவினருக்கானது,

தமிழீழத்தின் தேசியத் தலைவராகவும், தமிழ் தேசியத்தின் அடையாளமாகவும் திகழ்ந்துவரும் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் நமதும், நமது அடுத்து வரும் தலை முறைகளினதும் வழிகாட்டியாக அமைந்துள்ளார். நமது இதயக் கோவிலில் அவரை தெய்வமாக வைத்து போற்றிவருகின்றோம்.

இந்நிலையில், திரு.அனூப் சத்யன் (Anoop Sathyan) அவர்களால் எழுதி, இயக்கப்பட்ட, திரு.துல்கர் சல்மான் (Dulquer Salman) அவர்களால் தயாரிக்கப்பட்ட “வரனே அவஷ்யமுண்ட் ” (Varane Avashyamund) என்ற திரைப்படம், 07/02/2020 அன்று வெளியிடப் பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் ஒரு காட்சியில், நமது தேசியத் தலைவர் அவர்களின் பெயரை ஒத்த “பிரபாகரா” என்ற ஒலிப்புரிதலைத் தரக்கூடிய பெயரைக் கொண்டு நாய் ஒன்றை அழைப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

இக் காட்சி இணைய ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இது நமக்கு மிகுந்த மன உளைச்சலையும், வேதனையையும் தருகின்றது. இக் காட்சியின் மூலம், திரைப்படத்திற்கு பொறுப்பானவர்கள், நம் மீதான காழ்ப்புணர்வையும், இனவெறுப்பையும் உமிழ்ந்துள்ளதாக உணர்கின்றோம். இச்செயலை செய்தவர்கள், வேண்டுமென்றே நமக்கான மனக்குழைவை ஏற்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டை மிக அழுத்தமாக முன்வைக்கின்றோம்.

இச்செயலுக்கான நமது கடுமையான கோபத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தனிப்பட்ட ட்வீட் கணக்குகளில், சில வரி மன்னிப்புக் கோரிக்கையை முன்வைப்பதனால் எம்மை சமாதானப்படுத்த முடியாது. குறிப்பிட்ட காட்சியை உடனடியாக திரைப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என அழுத்தம் திருத்தமாக கேட்டுக் கொள்கிறோம்.

தவறின், நாங்கள் வசித்துவரும் நாடுகளில், இத்திரைப்படம் மற்றும் பணிக்குழுவினருக்கும் எதிரான, சட்டப்படியான எதிர்வினைகள் ஆற்றப்படும் எனவும் எச்சரிக்கின்றோம். கருத்துச் சுதந்திரம் உங்களுக்கும், எங்களுக்கும் பொதுவானது என்பதனை நினைவுபடுத்துகின்றோம்.
நன்றி

புலம் பெயர் வாழ் தமிழ்த் தேசியக் கலைஞர்கள்
பிரான்ஸ் – 27/04/2020

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *