Breaking News
Home / ஈழச் செய்திகள் / ராஜீவ் கொலை வழக்கில் தமிழகச் சிறையில் வாடும் முருகனின் தந்தையார் ஈழத்தில் காலமானார்.

ராஜீவ் கொலை வழக்கில் தமிழகச் சிறையில் வாடும் முருகனின் தந்தையார் ஈழத்தில் காலமானார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழகத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் எனும் ஸ்ரீஹரனின் தந்தையார் வைரவப்பிள்ளை வெற்றிவேல் (வயது75) இன்று (27.04.2020) திங்கட்கிழமை யாழில் உயிழந்துள்ளார்.

இத்தாவில் பளையைச் சேர்ந்த இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று அதிகாலை அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

இதே வேளை, தனது தந்தை இறப்பதற்கு முன்னர் கைபேசியின் காணொளிமூலம் தந்தையின் முகத்தை பார்க்க சட்டத்தரணி ஊடாக முருகன் விடுத்த கோரிக்கையை ஈவிரக்கமின்றி தமிழக அரசு மறுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அவரது தந்தையாரது உடல் இத்தாவில் பளையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை இறுதி கிரியைகள் இடம் பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *