Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / இல் து பிரான்ஸ் மாகாண முதல்வரின் இரு முக்கிய அறிவிப்புக்கள் !

இல் து பிரான்ஸ் மாகாண முதல்வரின் இரு முக்கிய அறிவிப்புக்கள் !

நவிகோ பயண அட்டை சந்தாதாரருக்கு துணியினால் தைக்கப்பட்ட முகக்கவசங்கள் மற்றும் Lycée மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக மாகாண முதல்வர் அறிவித்துள்ளார்.

மே 11 ஆம் திகதியில் இருந்து Île-de-Franceகுள் பொது போக்குவரத்துக்கள் வழமைக்குத் திரும்பவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், பயணிகள் அனைவருக்கும் முகக்கவசங்கள் வழங்கப்படும் என மாகாண முதல்வர் Valérie Pécresse உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், ஒவ்வொரு நிலையங்கள், பேருந்து தரிப்பிடங்களிலும் காகிதத்தினால் செய்யப்பட்ட ‘ஒரு தடவை பயன்படுத்தும்’ முகக்கவசங்களை வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், (27/04/2020) நேற்றுக் காலை ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த Valérie Pécresse, நவிகோ பயனாளர்களுக்கு துணியினால் தைக்கப்பட்ட துவைத்து, மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்கள் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

மற்றும் Lycée இல் படிக்கின்ற bourse வாங்குகின்ற மாணவ குடும்பங்களுக்கு ஒரு மாணவருக்கு 60€ என்ற அடிப்படையில் உதவித்தொகை மே மாதம் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *