Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / ஒரு பக்கம் கோபம், மறுபக்கம் நேசம் , பிரான்சின் எதிர்க் கட்சி காட்டம் !

ஒரு பக்கம் கோபம், மறுபக்கம் நேசம் , பிரான்சின் எதிர்க் கட்சி காட்டம் !

கொரோனா பரவ சீனா தான் காரணம் என ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பல குற்றம் சாட்ட, மறு பக்கம் அதே சீனாவிடம் கொரோனாவை தடுப்பதற்காக பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கும் நிலை கண்டு பிரான்சின் எதிர்க் கட்சி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றுப் பிரச்சினையின் போது பாதுகாப்பு உபகரணங்களுக்காக சீனாவையே நம்பியிருக்கும் நிலையைக் கண்டபின்னராவது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், பல்வேறு பொருட்களுக்காக சீனாவையே பெருமளவில் நம்பியிருப்பதை உணரவேண்டும் என பிரான்சின் எதிர்க்கட்சி காட்டமாக கூறியுள்ளது. கொரோனா கொள்ளை நோய் பரவியதால் தான் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எந்த அளவுக்கு மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், மாஸ்குகள், கையுறைகள் மற்றும் வெண்டிலேட்டர்களுக்காக சீனாவை நம்பியிருக்கின்றன என்ற உண்மை தெரியவந்துள்ளது.

பொருளாதார ரீதியாக யாரையும் எதிர்பாராமல் சொந்தக் காலில் நிற்கும் ஒரு வலிமையான ஐரோப்பாவை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றார் எதிர்க்கட்சியைச் சேர்ந்த M Jacob. பிரான்ஸ் நிதியமைச்சரான Bruno Le Maireம், இம்மாத ஆரம்பத்தில் இதே போன்றதொரு எச்சரிக்கையை விடுத்தார்.

உலக பொருளாதாரத்தில் கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின் என்ற ஒரு நிலை இருக்கப்போகிறது என்றார் அவர். சில குறிப்பிட்ட பொருட்களுக்காக, சீனா உட்பட சில பெரிய நாடுகளைச் சார்ந்திருப்பதை நாம் குறைக்க வேண்டும் என்று கூறிய அவர், கார்கள், வான்வெளி மற்றும் மருந்துகள் போன்ற விடயங்களில் நமது தற்சார்புடைமையை வலிமையாக்க வேண்டும் என்றார். அமெரிக்கா முதலான நாடுகள் கொரோனா சீனாவின் வுஹானிலிருந்து தான் கொரோனா உலக நாடுகளுக்கு பரவியதாக கடுமையாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *