Breaking News
Home / உலகம் / வடகொரிய அதிபர் உள்ளிட்ட தலைவர்களுடன் நாளை பேச்சு – அமெரிக்க அதிபர் தெரிவிப்பு.

வடகொரிய அதிபர் உள்ளிட்ட தலைவர்களுடன் நாளை பேச்சு – அமெரிக்க அதிபர் தெரிவிப்பு.

வடகொரிய அதிபர் கிம் ஜொங்-உன் உள்ளிட்ட தலைவர்களுடன் நாளைய நாள் (ஞாயிற்றுக்கிழமை) பேசவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வொஷிங்ரனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், நாளை கேம்ப் டேவிட் ஓய்வு இல்லத்துக்குச் செல்லவிருப்பதாகவும், அப்போது கிம் ஜொங் உன் உட்பட உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் தொலைபேசியில் பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்.

வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் உடல் நலக்குறைவால் பாதிப்பட்டதாகவும், சில ஊடகங்களில் மரணித்து விட்டதாகவும் ஐயம் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கிம் ஜொங் உன் நலமுடன் இருப்பதாகத் தென்கொரியா ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில், தொழிலாளர் நாளில் புதிய உரத்தொழிற்சாலையை அவர் திறந்து வைத்த ஒளிப்படம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் கிம், இருபது நாட்களுக்குப் பிறகு பொது வெளியில் தோன்றி தன் மீதான தொடர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.இதற்கு முன்னர், கிம் குறித்த தகவல் வெளியாகாத நிலையில் சில புலனாய்வுத் தகவலை வைத்து, கிம்மின் உடல்நிலை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கவலை வெளியிட்டிருந்தார்.தற்பொழுது கிம் ஜொங் உன் பொது வெளியில் தோன்றியுள்ளதால் அவருடன் பேசவுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *