Breaking News
Home / உலகம் / கொரோனா -அவுஸ்திரேலியா மே 8 நாள் வழமைக்குத் திரும்புகிறது.

கொரோனா -அவுஸ்திரேலியா மே 8 நாள் வழமைக்குத் திரும்புகிறது.

அவுஸ்ரேலியாவில் நடைமுறையில் உள்ளிருப்புக் கட்டுப்பாடுகளை, குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே தளர்த்துவதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடும் கட்டுப்பாடுகள் விதித்ததன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று பரவல், குறைந்திருப்பதாலேயே அவுஸ்ரேலியா இந்த முடிவினை எடுத்துள்ளது. இதற்கு முன்னதாக மே 11ஆம் திகதி முதல் சில தளர்வுகளை கொண்டு வரலாம் என முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அந்த திகதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மே 8 ஆம் திகதி தளர்த்தப்படவுள்ளன.

அவுஸ்ரேலியாவின் வடக்கு மாகாணங்களில் முன்பே சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அங்கு பூங்காக்கள், நீச்சல் குளம் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன. தெற்கு அவுஸ்ரேலியா இப்போது உலகின் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக கருதப்பட வேண்டும் என அவுஸ்ரேலிய சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *