Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் அவசர கால நிலைமையை ஜூலை 24 வரை நீடிப்பு.

பிரான்சில் அவசர கால நிலைமையை ஜூலை 24 வரை நீடிப்பு.

இத்தாலியின் மிலான் நகர தொடருந்து இருக்கைகளிலும் தரையிலும் சமூக இடைவெளி பேணும் சுவர் ஒட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

மே 11 ஆம் திகதிக்குப் பின்னர் பாரிஸில் நாளாந்த வாழ்வு புதிய நடை முறைகளில் பயணிக்கப்போவது தெரிகின்றது.

சுகாதார அவசர காலநிலைமையை ஜூலை 24 ஆம் திகதி வரை நீடிக்க அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த வாரம் இதற்கான ஒப்புதல் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் பெற்றுக்கொள்ளப்படும்.

இந்தச் சட்ட விதிகளின் கீழ் பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை கண்காணிக்க பொலிஸாருக்கு மேலதிகமாக தனியான காவலர்களை அரசு நியமிக்கவுள்ளது. பொலிஸ் ரிசேர்வ் படைகளின் உதவி இதற்கெனப் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

பொது இடங்களிலும், ரயில் மற்றும் வாகனப் போக்குவரத்துகளிலும் பொதுமக்கள் மாஸ்க் அணிவதை இவர்கள் கண்காணிப்பார்கள் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் மெற்றோ ரயில்களில் சமூக இடைவெளி பேணும் மிகச் சவாலான வேலையை முன்னெடுக்க போக்குவரத்துத்துறை பணியாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

ரயில் பெட்டிகளின் உள்ளே இருக்கைகளில் எங்கெங்கு அமரலாம் என்பதைக் காட்டும் விதமாக ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும். நின்று கொண்டு பயணிப்பவர்களும் தமக்குள் குறைந்தது ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணவசதியாக தரையிலும் குறியீடுகள் இடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பாரிஸ் மெற்றோக்கள் பொதுவாகவே பயணிகளால் நிரம்பி நெருக்கடிக்கு உள்ளாகுவது வழமை. அதிலும் காலையிலும் மாலையிலும் வேலை நேரங்களில் நெரிசல் மோசமாவதுண்டு. இந்த நிலையில் ரயில்களில் சமூக இடைவெளி பேணுவது என்பது நகைப்புக்கிடமான ஒன்று என்கின்றனர் சிலர்.

“13 ஆவது வழித்தட மெற்றோக்களில்(Métro Line 13) நாங்கள் ஒரு மில்லிமீற்றர் சமூக இடைவெளியில் நின்றுதான் பயணிப்பது வழக்கம். வேண்டுமானால் இனிமேல் அதனை ஐந்து மில்லிமீற்றர்களாகப் பேணுவதற்கு முயற்சிப்போம்” – என்றவாறு எல்லாம் சமூகவலைத் தளங்களில் ‘நக்கலான’ பதிவுகள் சுற்றுகின்றன.

ஆனால் இனிமேல் ரயில்களில் ஏறும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்படும் என்றுதெரிவிக்கப்படுகிறது. அதற்கேற்ப சேவைகள் அதிகரிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்த ரயில் நிலையங்களில் பணியாளர்கள் பலர் புதிதாக கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மாஸ்க் அணிவதை ஊக்குவிப்பதற்காக ரயில் நிலையங்களில் இலகுவாக அவற்றை வாங்குவதற்கு வசதி செய்யப்படும் என்றும் தகவல்.

பிரான்ஸில் மட்டுமன்றி வேறு சில ஐரோப்பிய நகரங்களிலும் ரயில் பயணிகளுக்கு இது போன்ற கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

நன்றி : ஊடகவியலாளர் : குமாரதாசன் கார்த்திகேசு

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *