Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / அமெரிக்க அணு ஆயுதங்கள்-ஜேர்மனியின் பாதுகாப்பிற்கு ஆபத்து.

அமெரிக்க அணு ஆயுதங்கள்-ஜேர்மனியின் பாதுகாப்பிற்கு ஆபத்து.

ஜேர்மனி மண்ணில் அமெரிக்க அணு ஆயுதங்கள் இருப்பது ஜேர்மனியின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது என்பதால் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) நாடாளுமன்றத் தலைவர் ரோல்ஃப் மெட்ஸெனிச் (Rolf Mützenich) கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தகைய நடவடிக்கை நேட்டோவில் ஜேர்மனியின் உறுப்பினர் பதவியை கேள்விக்குள்ளாக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கீழ் அமெரிக்க அணுசக்தி மூலோபாயத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிப்பிடுவதன் மூலம் அவர் தனது கோரிக்கையை நியாயப்படுத்தினார்.

ட்ரம்பின் நிர்வாகத்தினர், அணு ஆயுதங்களை முற்றிலும் தடுப்பதாக அல்லாமல் போருக்குச் செல்பவர்களாகவே உள்ளனர். இதனால் அதிகரிக்கும் அபாயத்தை கணக்கிட முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, எஸ்.பி.டி. நாடாளுமன்றத் தலைவர் மெட்ஸெனிச்சின் கோரிக்கை தவறான நேரத்தில் தவறான சமிக்ஞையாகும் என்று Free Democratic கட்சியின் (எஃப்.டி.பி) பாதுகாப்பு விவகார செய்தித் தொடர்பாளர் மேரி-ஆக்னஸ் ஸ்ட்ராக்-சிம்மர்மேன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தீர்மானம், வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை குறித்த கூட்டணியில், ஜேர்மனியின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் எனவும் அமெரிக்க அணு ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டால் நேட்டோவின் அணுசக்தி மூலோபாயத்தில் ஜேர்மனியும் அதே செல்வாக்கைக் கொண்டிருக்கும் என்று நம்புவது கடினம் என்றும் அவர் கூறினார்.

பல பனிப்போருக்கு முன்னதாகவே அமெரிக்கா பல தசாப்தங்களாக ஜேர்மனியில் அணு ஆயுதங்களைக் குவித்துள்ளது. இது ரஷ்யாவிற்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *