Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரெஞ்சு மக்களின் உயிரைப் பணயம் வைக்க நான் அனுமதிக்க மாட்டேன் – சுகாதார ஒருமைப்பாட்டு அமைச்சர்.

பிரெஞ்சு மக்களின் உயிரைப் பணயம் வைக்க நான் அனுமதிக்க மாட்டேன் – சுகாதார ஒருமைப்பாட்டு அமைச்சர்.

பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த காலத்திலிருந்து, சுழன்று திரிந்து, பரப்பாக வேலை செய்யும் அமைச்சர்களில் முக்கியமானவர் சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சரான Olivier Véran அவர்கள்.

அவர், Le Parisien ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், மே 11 ஒரு இலக்கே தவிர நிச்சயமான திகதியல்ல. கொரோனா வைரஸ் பரவலின் நிலை சாதகமாக இல்லாவிட்டால் இந்த திகதி பிற்போடப்படும் எனவும் பிரெஞ்சுக்காரர்கள் தங்களது விடுமுறைகளை இப்போதைக்கு முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய நாட்களில் பல நகரங்களில் ஒரு தளர்வு ஏற்பட்டுள்ளது. தெருக்களில் அதிகமான மகிழுந்துகள் மற்றும் அதிகமான நடமாடுகின்றனர். மேலும் மக்கள் அதிகமாக வெளியே சென்றால், “உள்ளிருப்பிலிருந்து வெளியேறும் திகதி கேள்விக்குள்ளாகலாம், மேலும் அவை துறைகளின் படி மதிப்பீடு செய்யப்படும் என எச்சரிக்கிறார்.

“பிரெஞ்சு மக்களின் பாதுகாப்பும் சுகாதாரமுமே எனக்கு முக்கியம், இறுதி நாள் வரைக்கும் உள்ளிருப்பு மதிக்கப்பட்டு, கொரோனா வைரஸ் தொற்று வீதம் குறைந்தால் மட்டுமே உள்ளிருப்பிலிருந்து வெளியேறுவது பற்றி சிந்திக்கப்படும், அது வரை மே 11 நிச்சயமானதல்ல. எக்காரணத்துக்காகவும் பிரெஞ்சு மக்களின் உயிரைப் பணயம் வைக்க நான் அனுமதிக்க மாட்டேன்” என Olivier Véran குறிப்பிட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

•இந்த கோடையில் பிரெஞ்சுக்காரர்கள் விடுமுறையில் செல்ல முடியுமா?

துரதிர்ஷ்டவசமாக என்னிடம் பதில் இல்லை, கடற் கரைகளைத் திறக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக வைரஸ் விடுமுறையில் செல்ல முடிவு செய்யும் வாய்ப்பு அதிகம் இல்லை. ஏனெனில் சிகிச்சை மற்றும் தடுப்பூசி இல்லாத நிலையில் முடிவெடுப்பது தகுந்ததல்ல எனத் தெரிவித்துள்ளார்.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *