Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் பாடசாலைகள் ஆரம்பிப்பதை பிற்போடுமாறு கோரிக்கை !

பிரான்சில் பாடசாலைகள் ஆரம்பிப்பதை பிற்போடுமாறு கோரிக்கை !

இல் து பிரான்சுக்குள் மே 11 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிப்பதை பிற்போடுமாறு கோரிக்கைகள் வலுக்கின்றன.

இவ்வாறு, latribune இணையதளத்தில் மே 3 ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு திறந்த கடிதத்தில், இல் து பிரான்சு மேயர்களின் சங்கம், இம்மானுவேல் மக்ரோனிடம் “தனித்தனியாக” பள்ளிகளை மீண்டும் திறக்கும் திகதியை பிற்போடுமாறு கேட்டுக் கொண்டது. மொத்தத்தில், Anne Hidalgo உட்பட 337 நகர முதல்வர்கள் இந்த கடிதத்தில் இணைந்து கையெழுத்திட்டனர்,

மொத்தமாக 337 நகர முதல்வர்கள் அதிபருக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். மே 11 ஆம் திகதி பிரான்ஸ் இயல்பு நிலைக்கு திரும்புகின்றது. பல்வேறு நிறுவனங்கள் மீண்டும் இயங்க ஆரம்பிக்கின்றன. பாடசாலைகளின் ஒரு பகுதியும் இயங்க ஆரம்பிக்கின்றன. பாடசாலைகள் திறப்பதை பிற்போடுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

“பாடசாலைகள் மே 11 ஆம் திகதி திறக்கப்படுவது மிக ஆபத்தானது, பிரான்சில் ஆபத்து முற்றாக விலகும் வரை காத்திருக்கவேண்டும்” என முதல்வர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். தவிர, இந்த சுகாதார பிரச்சனை ‘ஓர் இரவில்’ தீரும் பிரச்சனை இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *