Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் பகிரங்கமாக திருட்டில் ஈடுபட்ட பெண் மற்றும் 3 ஆண்கள் !

பிரான்சில் பகிரங்கமாக திருட்டில் ஈடுபட்ட பெண் மற்றும் 3 ஆண்கள் !

பிரான்சில் Saint-Denis மற்றும் Noisy-le-Sec பகுதிகளில் வீதியில் சென்றவர்களிடம் அனுமதிப் பத்திரசோதனை மேற்கொண்டுள்ளனர் நான்கு போலி காவல் துறையினர்.

முப்பது வயதுடைய ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்கள் கொண்ட குழு ஒன்று இச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கடந்த வாரம் முழுவதும் Saint-Denis மற்றும் Noisy-le-Sec ஆகிய பகுதிகளில் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களை காவல்துறையினர் போன்று அடையாளப்படுத்தி, வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டதோடு, அனுமதி பத்திரம் உள்ளதா எனவும் சோதனையிட்டுள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு தண்டப்பணம் அறவிட்டதோடு கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

ஒவ்வொரு தடவையும் €1,500 யூரோக்களில் இருந்து €3,000 யூரோக்கள் வரை கொள்ளையிட்டுள்ளனர். இதுவரை மொத்தமாக €40,000 வரை இவர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் குறிப்பாக வெளிநாட்டவர்களை குறிவைத்தே இந்த கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் கண்டிப்பாக பணம் இருக்கும் என்பதாலும், அவர்களால் மிக இலகுவாக பிரெஞ்சு பேச முடியாது என்பதாலும் அவர்களை இந்த கும்பல் குறிவைத்துள்ளது. குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *