Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் பொதுப் போக்குவரத்துக்கான புதிய நடைமுறைகள் !!

பிரான்சில் பொதுப் போக்குவரத்துக்கான புதிய நடைமுறைகள் !!

எதிர்வரும் மே11ம் நாள் பொதுமுடக்கம் படிப்படியாக நீக்கம் செய்யப்படவுள்ள நிலையில், கொரோனாவுடன் வாழப்பழகும் வகையில் RATP-SNCF பொதுப்போக்குவரத்துக்கான புதிய நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

பொதுப்போக்குவரத்துக்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுவதோடு, சமூக இடைவெளியினைப் பேணும் வகையில் இருக்கைகள் அடையாளப்பட்டு வருகின்றன. தொடருந்து நடைபாதைகளிலும் சமூக இடைவெளிக்கான அடையாளங்கள் இடப்பட்டு வருகின்றன.

இருக்கைகளில் எங்கெங்கு அமரலாம் என்பதைக் காட்டும் வகையிலும், நடை பாதை பயணிகள் ஒரு மீற்றர் இடைவெளியினை பேணும் வகையிலும் குறிப்பு ஒட்டிகள் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன.

சுகாதார அவசரகால நிலைச் சட்டத்துக்கு அமைய பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை கண்காணிப்பதற்கு மேலதிக காவல்துறை பிரிவினை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, பயணங்களின் போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு 135 யூரோ தண்டம் விதிக்கும் அதிகாரத்தினையும் வழங்கியுள்ளது.

வைரஸ் தொற்று இன்னமும் உயிர்புடன் உள்ள சிவப்பு அடையாள பிராந்தியாமாக இல்-டு-பிரான்ஸ் உள்ள நிலையில், பொதுப் போக்குவரத்துக்களில் பயணிகளின் நெரிசலை, எண்ணிக்கையினை குறைக்க பிராந்திய நிர்வாகம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக வீடுகளில் இருந்து வேலை செய்யக் கூடிய துறையினரை இயன்றவரை வீடுகளில் இருந்து வேலை செய்வதற்குரிய ஏற்பாடுகளை பல்வேறு நிறுவனங்களுடன் ஏற்படுத்த பரிஸ் நகரசபை பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றது. இதே வேளை உந்துருளி பாவனையினை அதிகரிக்கும் வகையில் இல்-டு-பிரான்சில் உந்துருளிகளுக்கான தனிப்பாதைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *