Breaking News
Home / உலகம் / “இந்த ஆண்டின் இறுதிக்குள் எங்களிடம் தடுப்பு மருந்து இருக்கும் ” அமெரிக்க அதிபர.

“இந்த ஆண்டின் இறுதிக்குள் எங்களிடம் தடுப்பு மருந்து இருக்கும் ” அமெரிக்க அதிபர.

2021ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து அமெரிக்காவிடம் இருக்கும் என தான் நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், ‘இந்த ஆண்டின் இறுதிக்குள் எங்களிடம் தடுப்பு மருந்து இருக்கும் என நான் உறுதியாக இருக்கிறேன். நீங்கள் அதை கூறக்கூடாது என மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால் நான் என்ன நினைக்கிறேனோ அதை நான் சொல்லுவேன்.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் மற்ற நாடுகளும் ஈடுபட்டுள்ளன. ஆனால் அமெரிக்கா தான் முதலில் கண்டு பிடிக்கும் என நம்புகிறேன். அப்படி ஒரு வேளை மற்ற நாடுகள் தடுப்பு மருந்தை முன்கூட்டியே கண்டுபிடித்தால் அந்த நாட்டுக்கு வாழ்த்துத்துக்கள் தெரிவிப்பேன், மிகவும் மகிழ்ச்சியும் அடைவேன்.

எந்த நாடு கண்டுபிடித்தாலும் பரவாயில்லை, முதலில் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து வர வேண்டும். அமெரிக்காவில் மனிதர்களுக்கு உடலில் செலுத்தி பரிசோதிக்கும் முயற்சி நடந்து வருகிறது. அதற்கான தன்னார்வலர்கள் பலர் வந்துள்ளனர். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கவில்லை எனதெரிவித்துள்ளார்.

உலக முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே இதற்கான பணிகளை தொடங்கி விட்டன.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *