Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் பாடசாலையின் அத்தாட்சிப் பத்திரம் (justificatif) வழங்கினால் மட்டுமே ஊதியம் !

பிரான்சில் பாடசாலையின் அத்தாட்சிப் பத்திரம் (justificatif) வழங்கினால் மட்டுமே ஊதியம் !

கொரோனா வைரஸ் பரவலினால் பிரான்சில் நிறுவனங்கள் மூடியுள்ள நிலையில் 10 மில்லியன் மக்களுக்கு மேல் பகுதிவேலையிழப்பில் (chômage partiel), அரசாங்கம் வழங்கும் ஊதியத்தில் தங்கி உள்ளனர்.

மே 11க்குப் பின்னர், பெருமளவான நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட இருக்கும் நிலையிலும், பாடசாலைகள் சில ஆரம்பிக்க இருக்கும் நிலையிலும், இன்னமும் தங்களது பிள்ளைகளைப் பாடசாலைக்கு விடாத பெற்றோர், மே மாத இறுதி வரையிலும் தொடர்ந்தும் பகுதி வேலையிழப்பு (chômage partiel) ஊதியத்தில் இருக்க முடியும்,

மேலும், ஜுன் மாத ஆரம்பத்திலிருந்து குறிப்பட்ட பாடசாலை ஆரம்பிக்கப்படவில்லை என்றோ, அல்லது அனைத்து மாணவர்களையும் வகுப்பில் உட்கொள்ளும் வசதியில்லையென்றோ, பாடசாலையின் அத்தாட்சிப் பத்திரம் (justificatif) வழங்கினால் மட்டுமே, பிள்ளைகளைப் பராமரிக்கும் காரணத்தைக்கான பகுதி வேலையிழப்பு ஊதியத்தைப் பெறமுடியும் எனவும் இன்று செனட் சபையில் தொழிற்துறை அமைச்சர் (ministre du Travail) Muriel Pénicaud உறுதியாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் மூடப்பட்டுள்ள நிறுவனங்கள், உணவகங்கள், அருந்தகங்கள், திரையரங்குகள் போன்ற திறக்கப்படாத நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு, எந்த அத்தாட்சிப் பத்திரமுமின்றி வழமை போல் பகுதிவேலையிழப்பு ஊதியம் தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *