Breaking News
Home / உலகம் / முகநூல் ” Supreme Court’ சுயாதீன குழுவில் மேலும் 20 பேர் இணைப்பு.

முகநூல் ” Supreme Court’ சுயாதீன குழுவில் மேலும் 20 பேர் இணைப்பு.

முகநூல் பதிவுகளின் உள்ளடக்கங்களை கண்காணித்து அவற்றை நிராகரிக்கும் அல்லது அனுமதிக்கும் மேற்பார்வைப் பணிக்காக சர்வதேச அனுபவசாலிகள் 20 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

” Supreme Court ‘என அழைக்கப்படவுள்ள இந்த சுயாதீன குழுவில் விரைவில் மேலும் 20 பேர் இணைக்கப்படுவர்.

முகநூல் நிர்வாகம் இத்தகவலை அறிவித்திருக்கிறது.

முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் பதிவுகளில் பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம், மத சுதந்திரம், டிஜிட்டல் காப்புரிமை, டிஜிட்டல் சுதந்திரம்,இணையப் பாதுகாப்பு, சமூகத் தரம் போன்ற விடயங்களை இந்த நிபுணர்கள் குழு கண்காணித்து தீர்மானிக்கும் என்று அறிவிக்கப்பட் டிருக்கிறது.

டென்மார்க்கின் முன்னாள் பிரதமர், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், டிஜிட்டல் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், மனித உரிமையாளர்கள் உட்பட பல துறை சார்ந்தவர்கள் இக்குழுவில் இடம்பெறுகின்றனர்.

யேமன் நாட்டைச் சேர்ந்த பெண் உரிமை செயற்பாட்டாளரும் சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான Kolkata Abdel-Salam Karman, டென்மார்க்கின் முதல் பெண் பிரதமரான Helle Thorning-Schmidt, சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் முன்னாள் நிறைவேற்றுப்ப பணிப்பாளர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள முக்கிய பெண்கள் ஆவர்.

இந்தியப் பல்கலைக்கழக தேசிய சட்டக் கல்லூரி துணைவேந்தர் பேராசிரியர் சுதிர் கிருஷ்ணசாமி (Sudhir Krishnaswamy) என்பவரும் இந்தக் குழுவில் இடம்பெறுகிறார்.

நன்றி : ஊடகவியலாளர் : குமாரதாசன் கார்த்திகேசு.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *