Breaking News
Home / ஈழச் செய்திகள் / சிறீலங்கா – அகத்தியமான மருந்துப்பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி.

சிறீலங்கா – அகத்தியமான மருந்துப்பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி.

அகத்தியமான மருந்துப்பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அரச மருந்தகக்கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்வதற்காக செலவிடப்பட்ட அந்நிய செலாவணியை சேமிக்கமுடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின் பிரகாரம் செயற்படும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால் 12 வீதம் முதல் 15 வீதம் வரையிலான மருந்துத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பரசிடோல் வணிக பெயரின் கீழ் சிறீலங்காவில் பரசிட்டமோல் வில்லைகள் வெற்றிகரமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இலங்கை மருந்தாக்கட் கூட்டுதாபனம் தூசி துகள்கள் அற்ற சிறந்த சுகாதார நடைமுறைகளுடன் உயர் தரமான மருந்துகளை உற்பத்தி செய்து வருகின்றது.

மருந்து உற்பத்தி துறையில் 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலப் பகுதியில் செயற்பட்டு வரும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் மேலும் பல புதிய இலக்குகளை அடைவதற்காக நவீன தொழில் நுட்ப முறைகளை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *