Breaking News
Home / ஈழச் செய்திகள் / கொரோனாவை முற்றாக ஒழிக்க முடியும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத் தலைவர்.

கொரோனாவை முற்றாக ஒழிக்க முடியும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத் தலைவர்.

அரசாங்கம் வழங்கும் பாதுகாப்பு, சுகாதார செயன்முறைகளைப் பின்பற்றி பொது மக்கள் நடக்கும் போதே நாட்டில் இருந்து கொரோனாவை முற்றாக ஒழிக்க முடியும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத் தலைவர் எஸ்.மாமாங்கராஜா தெரிவித்தார்.

அத்துடன், உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா வைரஸை ஒழிப்பதில் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவின் சிறந்த வழிகாட்டலின் கீழ் ஸ்ரீலங்கா முன்னணி வகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) நடை பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த ஊடக சந்திப்பினைத் தொடர்ந்து இலங்கையில் கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை மதிப்பளிக்கும் வகையிலான பதாகைகளை தொங்க விடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் போது கொரனாவினை ஒழிப்பதற்கு பாடுபடும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக மட்டக்களப்பு சிவில் சமூக சங்கத்தின் தலைவர் மாமாங்கராஜா குறிப்பிட்டுள்ளார்.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *