Breaking News
Home / உலகம் / 2021 ஆம் ஆண்டுடன் மிகப்பெரிய விமானத்தின் தயாரிப்பை நிறுத்திக்கொள்ள AIR BUS முடிவு!

2021 ஆம் ஆண்டுடன் மிகப்பெரிய விமானத்தின் தயாரிப்பை நிறுத்திக்கொள்ள AIR BUS முடிவு!

உலகின் மிகப்பெரிய A 380 விமானத்தின் தயாரிப்பை அடுத்த ஆண்டுடன் நிறுத்திக்கொள்ள AIRBUS நிறுவனம் முடிவு செய்துள்ளது.

AIRBUS நிறுவனம் தயாரித்துள்ள A 380 வகை விமானத்தில் ஒரே நேரத்தில் பயணிகள் 800 பேர் அமர்ந்து செல்ல முடியும்.
இந்த விமானம் இடை நிற்றலின்றி தொடர்ந்து 16 மணி நேரம் பறக்கும் ஆற்றல் மிக்கது. 73மீட்டர் நீளங்கொண்ட இந்த விமானம் இறக்கைகளுடன் சேர்த்து 80 மீட்டர் அகலம் உள்ளது.

ஒரு மணி நேரத்துக்கு 1,185 கிலோமீட்டர் தொலைவு செல்லும் திறன்கொண்டது. ஒரு விமானத்தின் விலை சுமார் 446 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்

எமிரேட்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், லுப்தான்சா உள்ளிட்ட முதன்மையான நிறுவனங்கள் இந்த விமானத்தைத் தங்கள் சேவையில் பயன்படுத்திக் கொண்டுள்ளன.

இத்தகைய 750 விமானங்களைத் தயாரித்து விற்க AIRBUS திட்டமிட்டிருந்தது. பிரான்சின் Toulouse உள்ள தொழிற்சாலையில் இதுவரை 242 விமானங்களைத் தயாரித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு தயாரிப்பை நிறுத்த AIRBUS முடிவு செய்துள்ளது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *