Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் GRAND EST, மற்றும் Île-de-France பிராந்தியத்தில் புயல் எச்சரிக்கை !

பிரான்சில் GRAND EST, மற்றும் Île-de-France பிராந்தியத்தில் புயல் எச்சரிக்கை !

GRAND ESTல் சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று météo பிரான்ஸ் எச்சரித்திருந்தது

நேற்று (09/05/2020) சனிக்கிழமை தொடக்கம் GRAND EST பிராந்தியத்தில் இன்று அதிகாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் மற்றும் மணிக்கு 60/80 கி.மீ வேகத்தில் காற்றுவீசும் என்று météo பிரான்ஸ் எச்சரித்திருந்தது.

திங்கள்கிழமை முதல் வானிலை வறண்டதாக இருக்கும், ஆனால், லக்சம்பேர்க்கைப் போலவே , வெப்பநிலையும் கடுமையாக குறையும்.

அதேவேளை, பாரிஸ் மற்றும் அதன் பறநகரப் பகுதிகள் உட்பட 18 மாவட்டங்களுக்கு, இன்று வழங்கப்பட்டுள்ள புயல்மழை மற்றும் வெள்ள ஆபத்து (Orages, inondations) நாளை 11ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை உள்ளிருப்பு நீங்க உள்ள நிலையில் புயல் மழை எச்சரிக்கை அடுத்த நாள் காலை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Gers, Gironde, Landes, Pyrénées-Atlantiques Hautes-Pyrénées ஆகியவற்றில் நேற்று புயல் மழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை Charente-Maritime, Indre-et-Loire, Loir-et-Cher, Loiret, Lot-et-Garonne மற்றும் பரிஸ் மற்றும் அதன் நெருங்கிய சுற்று மாவட்டங்களான 75-92-93-94 ஆகியவையும், அடுத்த சுற்றுப் புறநகரங்களான Seine-et-Marne, Yvelines, Essonne et Val-d’Oise ஆகியவையும் இந்த செம்மஞ்சள் புயல் மழை எச்சரிக்கைக்குள் இன்று 10h00 மணிக்கு இணைக்கப்பட்டுள்ளன.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *