Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / ஜேர்மனியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு மீண்டும் வேகமாக பரவும் கொரோனா தொற்று !

ஜேர்மனியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு மீண்டும் வேகமாக பரவும் கொரோனா தொற்று !

ஜேர்மனியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகும், கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தாக்கம் அதிகமாக உள்ளதாக, பொது சுகாதார நிறுவனமான ரொபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முடக்க நிலை தளர்த்தப்பட்டு சில நாட்களே கடந்துள்ள நிலையில், தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட ஒரு நபரின் மூலம் நோய்த்தொற்று தற்போது ஒருவருக்கு மேல் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடக்க நிலையை முழுவதுமாக நீக்கக்கோரி கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது.

தொற்று வீதம் என்பது ஒரு நோயின் பரவலுக்கான திறனை மதிப்பிடுவதற்கான ஒரு வழியாகும். இது ஒரு நிலையான எண் அல்ல, ஏனெனில் இது நமது நடத்தை மாறும்போது அல்லது நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்போது மாறுகிறது.

பரவலைக் கண்காணிப்பதற்கான மூன்று முக்கியமான அளவீடுகளில் இதுவும் ஒன்றாகும். மற்றவை அறிகுறிகளின் தீவிரத்தன்மை மற்றும் தொற்றுகளின் எண்ணிக்கை.

சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட பொது சுகாதார நிறுவனத்தின் அறிக்கை, தொற்று வீதம் 1.1 என மதிப்பிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 1.13ஆக இருந்தது. கடந்த மூன்று வாரங்களில் இந்த எண்ணிக்கை 1 இற்க்கும் குறைவாகவே உள்ளது.

இந்த மதிப்பீட்டில் ‘ஒரு அளவு நிச்சயமற்ற தன்மை’ இருப்பதாக நிறுவனம் ரொபர்ட் கோச் நிறுவனம் கூறியது. மேலும் இந்த வீதம் எதிர்வரும் நாட்களில் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *