Breaking News
Home / ஈழச் செய்திகள் / சிறீலங்கா விண்ணூந்து சேவைகள் யூன் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம்.

சிறீலங்கா விண்ணூந்து சேவைகள் யூன் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம்.

சிறீலங்கா விண்ணூந்து சேவைகளை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நாட்டுக்குள் வரும் சகல பயணிகளையும் பரிசோதனை செய்யும் சிறப்பு வேலைத் திட்டம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், “விண்ணூந்து நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையினால், நாட்டுக்கு கிடைக்கவிருந்த மிகப்பெரிய வருமானம் இல்லாது போயுள்ளது. குறிப்பாக சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

எனினும் தற்போது நாட்டை மீண்டும் வழமைக்கு கொண்டுவருவதற்கான தீர்மானங்கள் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளன. பொருளாதார காரணிகளை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய விண்ணூந்து சேவைகளையும் வழமைக்கு கொண்டுவர வேண்டும் என்ற காரணிகளை நாம் முன்வைத்துள்ளோம்.

இப்போதிருந்து விண்ணூந்து நிலையங்களின் பராமரிப்பு மற்றும் பயணிகளை கண்காணிக்கும் மருத்துவ இயந்திரங்களை பொருத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கைக்கு வரும், செல்லும் பயணிகள் என சகலருக்கும் மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுப்பது குறித்தும் விண்ணூந்துப் பயணங்களில் சில மாற்று நேர அட்டவணைகளை கையாளவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது” என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *