Breaking News
Home / உலகம் / கனடா தேசத்தில் தாயகவிடுதலையை நெஞ்சிலே ஏந்தி உழைத்தவர்; சுரேந்திரன் தம்பிராஜா அவர்கள்.

கனடா தேசத்தில் தாயகவிடுதலையை நெஞ்சிலே ஏந்தி உழைத்தவர்; சுரேந்திரன் தம்பிராஜா அவர்கள்.

பிரான்சு வாழ் தமிழீழ மக்கள்

எமது இதய வீரவணக்கம் !

கனடா தேசத்தில் தாயக விடுதலையை நெஞ்சிலே தினம் ஏந்தி இரவு பகல் பாராது அயராது உழைத்தவர். சுரேந்திரன் தம்பிராஜா அவர்கள்.


கனடா தேசத்தில் வரலாறு காணாத மக்கள் பலத்துடன் பொங்குதமிழ் நிகழ்வை நாடாத்தி காட்டியவர் மற்றவர்களுக்கு உதவும் மனதைக்கொண்டவர். தானது சாவிலும் சரித்திரம் படத்தவர். வீதி விபத்தில் சிக்கிக்கொண்டவரை அதிலிருந்து காப்பாற்றி விட்டுஅந்த நபரை உயிர் பிழைக்க வைத்துவிட்டு எதிர்பாராத முகமாக அந்த விபத்தில் தன் உயிரை ஈந்தவர்.

கண்முண்ணே ஒரு வரலாற்றுக்காவிய நாயகன் நிச்சயமாய் தமிழீழ தேசம் இவரின் வாழ்நாள் பணிக்கும், இறுதித் தியாகத்திற்கும் மதிப்பளிக்கும் என்றும் மக்கள் மனங்களில் இந்த மாவீரன் மறக்காது வாழ்வான் என்றும் இவரின் பிரிவினால் துயருற்றிருக்கும் துணைவி, பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள் தமிழீழ தேசமக்களுடன் எமது துயரினையும் பகர்ந்து கொள்கின்றோம் எமது வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

– நமது FM ஊடகம்.
– பிரான்சு வாழ் தமிழீழ மக்கள்.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *