Breaking News
Home / உலகம் / கொரோனா வைரஸ் தொடர்பில் விசாரணை நடாத்த நிபந்தனை விதித்த சீனா!

கொரோனா வைரஸ் தொடர்பில் விசாரணை நடாத்த நிபந்தனை விதித்த சீனா!

Jonathan Bartlett illustration for Foreign Policy

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான சர்வதேச விசாரணையை பாதிப்புகள் குறைந்த பின்னர் நடத்த வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று சீனாவை தொடர்ந்து உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு சர்வதேச பொருளாதாரமும் கடும் சரிவை சந்தித்துள்ளது.

இதனை அடுத்து கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் சீனா தான் எனவும் இது குறித்து சர்வதேச அளவில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சீனாவுடனான வர்த்தகத்தை குறைத்துக்கொள்ளும் முடிவுக்கும் வந்துள்ளன. ஆனால் உலக நாடுகளில் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு சீன தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் 73 ஆவது கூட்டம் ஜெனிவாவில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமெரிக்கா, இந்தியா, உள்ளிட்ட 32 நாடுகளில் பிரதிநிதிகள் காணொளி தொடர்பாடல் மூலம் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்திலும் சீனா தொடர்பான பிரச்சனை எதிரொலித்தது. இதனைத் தொடர்ந்து காணொளி தொடர்பாடல் மூலம் கூட்டத்தில் பேசிய சீன அதிபர் ஜி ஜிங்பிங், சீனா கொரோனாவின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புடனும் செயல்பட்டு வருவதாகவும் இந்த விவகாரத்தில் சர்வதேச விசாரணை தேவையென்றால், கொரோனா பாதிப்புகள் அடங்கிய பின்னர் தான், வைரஸ் தொன்றிய விதம் மற்றும் கையாளப்பட்ட விதம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்த விசாரணை என்பது பாரபட்சமின்றி நடுநிலையுடன் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *