Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் முகக்கவசம் அல்லது கையுறைகளை தரையில் வீசினால் 300€ !

பிரான்சில் முகக்கவசம் அல்லது கையுறைகளை தரையில் வீசினால் 300€ !

முகக்கவசம் அல்லது பிளாஸ்டிக் கையுறைகளை தரையில் வீசியதற்காக 300 யூரோவரை அபராதம் விதிக்கும் மசோதாவை ஒரு பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றில் முன்மொழிந்தார்.

மே 11 ஆம் திகதி பொது முடக்கம் தளர்வு தொடங்கியதிலிருந்து, Lyon, Marseille மற்றும் Paris போன்ற பல நகரங்களில் குப்பை சேகரிப்பாளர்கள் தரையில் காணப்படும் முகக்கவசங்களின் எண்ணிக்கை குறித்து புகார் அளித்துள்ளனர்.

இவ்வாறான நடத்தை “முக்கியமான சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவிக்கும் அவர், தற்போது ஒரு நபர் ஒரு அறுவை சிகிச்சை முகக்கவசம் (அல்லது வேறு ஏதேனும் கழிவுகளை) தரையில் வீசினால் அந்நபர் பிடிபட்டால் € 68 அபராதம் விதிக்கப்படலாம் என சட்டம் இருக்கிறது

Les Républicains (right-wing) Eric Pauget நாடாளுமன்ற உறுப்பினர் தற்போதுள்ள அபராத தொகையை (68€) 300 யூரோவாக உயர்த்த விரும்புகிறார்.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *