Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais கடற்பகுதி வழியாக சிறிய இயந்திர படகில் பிரித்தானியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்தனர்.

அதிகாலை 4:30 மணிக்கு இவர்கள் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், pas de calaisயின் Dannes கடற்பகுதியில் வைத்து இவர்கள் மீட்கப்பட்டனர்.

கண்காணிப்பில் ஈடுபட்ட கடற்படை ஜொந்தாமினர் இவர்களை மீட்டுள்ளனர்.படகில், இரு பெண்கள், இரு சிறுவர்கள் மற்றும் ஒரு கைக்குழந்தை உட்பட மொத்தம் 20 பேர் பயணித்துள்ளனர். அவர்கள் அனைவரும் Boulogne-sur-Mer பகுதிக்கு அழைத்துவரப்பட்டனர்.

இவ்வருட ஆரம்பத்தில் இருந்து ஆங்கிலக்கால்வாயை கடக்கும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜனவரியில் இருந்து இவ்வாறு பயணித்த 293 அகதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

Check Also

கொவிட் -19 எதிரொலி: ஸ்பெயினில் விமான பயணிகளின் வருகை 99.7 சதவீதம் சரிந்தது !

கொரோனா வைரஸ் (கொவிட்-19) எதிரொலி காரணமாக, ஸ்பெயினில் விமான பயணிகளின் வருகை சரிந்துள்ளதாக, மாநில சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *