Breaking News
Home / உலகம் / பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

லாகூரில் இருந்து ஏர்பஸ் ஏ 320, எனும் உள்ளுர் விண்ணூந்து 99 பயணிகள் மற்றும் 8 ஊழியர்களுடன் கராச்சி நோக்கி சென்றது. அப்போது ஜின்னா சர்வதேச விண்ணூந்து நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த போது, என்ஜின் பகுதி கழன்று விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, விமானி, விமானத்தை 3 முறை தரையிறக்க முயற்சித்ததாகவும், ஆனால் அது முடியாமல் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. விழுந்த வேகத்தில் விண்ணூந்து தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

Check Also

கொரோனா வைரஸ் தொடர்பில் விசாரணை நடாத்த நிபந்தனை விதித்த சீனா!

Jonathan Bartlett illustration for Foreign Policy கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான சர்வதேச விசாரணையை பாதிப்புகள் குறைந்த பின்னர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *