Breaking News
Home / ஈழச் செய்திகள் / தொடர்ந்து திட்டமிட்ட இனவழிப்பை நோக்கியே கோத்தாவின் ஜனாதிபதி செயலணி-முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ்

தொடர்ந்து திட்டமிட்ட இனவழிப்பை நோக்கியே கோத்தாவின் ஜனாதிபதி செயலணி-முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ்

நாட்டில் தற்போது இருக்கும் ஜனாதிபதி அவர்களினால் தமிழர்தாயகப் பகுதியை மீண்டும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பிற்கு உட்படுத்துவதற்கான ஒருபாரிய ஏற்படு முன்னகர்த்தப் பட்டுவருகின்றது. அந்த முன்னகர்ப்பின் முதற்கட்டமாக தமிழர்தாயக கிழக்குமாகாணப் பகுதியில் இருக்கின்ற தொள்பொருட்ச்சின்னங்கள்,வரலாற்று அடையாளங்கள் போன்றவற்றை பராமரிப்பது அதனைகண்காணிப்பது என்றபோர்வையில் அந்தசெயலணி மூலமாக தமிழர்தாயக வரலாற்றுத் தொண்மைகளை மாற்றியமைப்பதற்காக அரசாங்கம் பாரிய நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை உருவாக்கியிருக்கின்றது.  இந்ததிட்டம் கிழக்குமாகாணத்தை தொடர்ந்து வடக்கு மாகாணத்திலும் அவ்வாறன செயலணி கொண்டுவர இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

2009 நடாத்திய மாபெரும் இனவழிப்பைத் தொடர்ந்து இந்த அரசாங்கம் இலங்கைத்தீவில் ஆரம்பத்திலிருந்தே ஆதிக்குடிகளாக இருந்துவந்தவர்கள் தமிழ்மக்கள். இலங்கைத்தீவில் அனைத்துப் பாகங்களிலும் தமிழர்கள் வாழ்ந்திருப்பதற்கான வரலாற்றுத் தொண்மைகள் நிறைந்த இந்தநாட்டில் இடையிட்டு வந்தசிங்கள மக்களின் வரலாற்றைச் சொல்லுகின்ற மகாவம்சம் கிட்டத்தட்ட 2500 ஆண்டு வரலாற்றை உள்ளடக்கியதாகவே இருக்கின்றது.  அந்த மகாவம்சத்தைத்தான் சிங்கள ஆட்சியாளர்களும் மக்களும் முதன்மை நூலாகக் கொண்டுள்ளனர்.  ஆனால் தமிழ்மக்கள் 6000 ஆண்டுகளுக்கு முதல் இலங்கைத்தீவில் வாழ்ந்தமைக்கான போதுமான அளவு தொல்லியல் ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.ஆகவே தமிழ்மக்கள்தான் இலங்கைத்தீவின் மூத்தகுடிகள் என்று நிரூபிக்க்கூடியதாகவுள்ளது. அவ்வாறான தொண்மை வரலாற்றுகளை மாற்றியமைக்கும் திட்டமாகவே தற்போது இருக்கின்ற அரசாங்கத்தால் இனவழிப்பின் வடிவமாகமே இருக்கின்றது. இலங்கைதீவின் பஞ்ச ஈச்சரங்கள் என்று சொல்லப்படும் சிவாலங்யங்கள் பல நூறாண்டு வரலாற்றுத் தொண்மைகளை கொண்டு வரலாற்று ரீதியாகப் பதியப்பட்டுள்ளது. அவ்வாறான ஆலயங்களுக்கு அருகில் என்றுமில்லாதவாறு சிங்களஅரசு விகாரைகளை அந்த ஆலயங்களுக்கு அருகாமையில் அமைத்து அந்த பௌத்தவிகாரைகளின் சிறப்புக்களை முன்னகர்த்துவதன்காரணம் சிவ ஆலயங்களும் விகாரைகளும் ஒன்றாக இருக்கும்போது அவற்றை வரலாற்றில் ஒன்றிணைப்பதன் உள்நோக்கமே அது. அதேபோல் இன்று தமிழர்தாயகப்பகுதியில் தொண்மையாகவிருக்கும் பல விடயங்களை மாற்றியமைக்கும் முகவாகவும் அந்த வரலாற்றுச் சிறப்புக்களை பின்னகற்றும் முகமாகவும் வடகிழக் குதமிழர்தாயகத்தில் சிங்களவர்களும் வாழ்ந்தார்கள் என்று நிறுவுவதற்கும் சிங்களமக்களின் அடையாளங்கள் இருக்கின்றன என்று எதிர்காத்தில் நிரூபிக்கத்தான் இந்ததொல்லியல் நிலப்பரப்புக்களை தொல்லியல் சார்ந்தபகுதிகளை இராணுவகட்டமைப்புக்குள் உற்படுத்தி இராணுவக் கட்டமைப்பு ஜனாதிபதிசெயலணி என்று உருவாக்கப்பட்டு மீண்டும் ஒரு இனவழிப்பை இந்த அரசாங்கம் மெற்கொள்கின்றது. என முன்னள் வடமாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *