Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / ஈஃபில் டவர் (Eiffel tower) மீண்டும் திறக்கப்பட உள்ளது……

ஈஃபில் டவர் (Eiffel tower) மீண்டும் திறக்கப்பட உள்ளது……

உலக புகழ்ப்பெற்ற பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான பிரான்ஸின் ஈஃபில் டவர் (Eiffel tower) மீண்டும் திறக்கப்பட உள்ளது.COVID-19 நோய்த்தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த கோபுரம் ஜூன் 25 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.ஆனால் கோபுரத்தில் உள்ள தளங்களுக்குச் செல்ல மின்தூக்கிகளைப் பார்வையாளர்கள் பயன்படுத்த அனுமதியில்லை, படிக்கட்டுகளை மட்டுமே பயன்படுத்தமுடியும்.
ஈஃபில் டவர் 324 மீட்டர் உயரம் கொண்டது.கிருமித்தொற்று தொடர்பாக அனைத்துவிதமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படும் என்றும், கோடை காலத்திற்குள் முழுச் சேவைகளையும் மீண்டும் வழங்கவிருப்பதாகவும் ஈஃபில்
டவர் மேலாளர் தெரிவித்தார்.
தற்போது பார்வையாளர்களுக்கு இரண்டாம் தளம் வரைதான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நோய்த் தொற்று காரணமாக ஈஃபில் டவர்(Eiffel tower)
சுமார் 3 மாதங்களுக்கு மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *