Breaking News
Home / உலகம் / பிரிட்டனில் COVID – 19 தாக்கத்தால் தமிழ் வைத்தியர் மரணம்.

பிரிட்டனில் COVID – 19 தாக்கத்தால் தமிழ் வைத்தியர் மரணம்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரிட்டனின் கிங்ஸ்டன் மருத்துவமனையில் 70 வயதுடைய வைத்திய கலாநிதி அன்றன் செபாஸ்டியன் பிள்ளை (Dr Anton Sebastianpillai) மரணமானார்.

வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவரான இவர் கோவிட் -19 க்கு நேர்மறை பரிசோதனையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதிசெய்யப்பட்ட நிலையில் கிங்ஸ்ரன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 4 நாட்களின் பின் மரணமானார்.

1967 ஆம் ஆண்டில் இலங்கையில் மருத்துவ ஆலோசகராக தகுதி பெற்ற மருத்துவரான இவர், தென்மேற்கு லண்டனில் உள்ள மருத்துவமனையுடன் நீண்டகால தொடர்பினைக் கொண்டிருந்தார் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஓய்வு பெற்றதாக கூறப்பட்ட போதிலும் கிங்ஸ்டன் மருத்துவமனை NHS அறக்கட்டளையில் கடைசியாக மார்ச் 20 வரை பணியாற்றியதனை NHS உறுதிப்படுத்தி உள்ளது.

“கிங்ஸ்டன் மருத்துவமனையில் ஒரு பிரிவின் ஆலோசகராக இருந்த வயதான மருத்துவரின் மரணத்தை மிகுந்த சோகத்துடன் நான் உறுதிப்படுத்துகிறேன் ” என அறக்கட்டளை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *