Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் கொரோனாவுக்கு அதிகவிலை கொடுத்து வரும் Seine-Saint-Denis பிராந்தியம்.

பிரான்சில் கொரோனாவுக்கு அதிகவிலை கொடுத்து வரும் Seine-Saint-Denis பிராந்தியம்.

கொரோனாவுக்கு அதிகவிலை கொடுத்து வரும் Seine-Saint-Denis பிராந்தியம். ஏப்ரல் 5ம் திகதி சுகாதார அறிக்கையில் 24 மணிநேரத்துக்குள் நாடளாவியரீதியில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் 357ஆக இருந்த நிலையில், இதில் 285 இம்மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது. இதுவே இப்பிராந்திய சந்தித்துள்ள அபாயத்தினை வெளிக்காட்டுவதாக அமைகின்றது.

தமிழர்கள் செறிந்து வாழுகின்ற இல்-டு-பிரான்ஸ் மாகாணத்தில் 93 பிராந்தியத்திலேயே அதிகளவான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை இரையாகிய தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இப்பகுதியினைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, La Courneuve, Le Bourget, St-Denis, Drancy, Aubervillers ஆகிய பகுதியில் 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். பலர் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, பலரும் குணமடைந்துள்ளனர்.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *