Breaking News
Home / உலகம் / பிரித்தானிய சந்திக்கும் மிகப் பெரிய சவால் கொரோனா மறு பக்கம் வறுமை .

பிரித்தானிய சந்திக்கும் மிகப் பெரிய சவால் கொரோனா மறு பக்கம் வறுமை .

கொரோனா கோரத் தாண்டவம் ஆடி வரும் நிலையில், பிரித்தானியா வறுமை தலை விரித்தாடும் நிலையையும் சந்தித்து உள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பு பிரித்தானியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. 51,608 பேருக்கு வைரஸ்
தொற்று உள்ளது. இதில் 5,373 பேர் உயிரிழந்துள்ளனர் .நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் , இளவரசர் சார்லஸ் உள்ளிட்டோரையும், இந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை.

இந்த பாதிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், பொருளாதார பாதிப்பு அதால பாதாளத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது
குறித்து, பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளதாவது: கடந்த 2008 ல் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நாட்டில் 1.4 கோடி மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். அதில் 42 லட்சம் பேர் குழந்தைகள், அதாவது மொத்த மக்கள் தொகையில், நான்கில் ஒரு பங்கு மக்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில், 30 சதவீத குழந்தைகள் வறுமையில் உள்ளனர். கடந்த 15 நாட்களில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பொருளாதார பாதிப்பில் சிக்கி தவிப்பதாக அரசிடம் உதவி கேட்கும் ‘யூனிவர்சல் கிரெடிட்’ பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இது வழக்கத்தை விட 10 மடங்கு அதிகம்.

வறுமை கோட்டுக்கு கீழுள்ள ஏழை குழந்தைகளுக்கு, பாடசாலைகளில் உணவு வழங்கப்படுகிறது. தற்போது பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த உணவு திட்டத்துக்கு நன்கொடை அளிப்பது தற்போது குறைந்துள்ளது. ஊரடங்குக்குப் பிறகு தங்களுடைய பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்ற அச்சத்தில் நன்கொடை அளிப்பதை பலர் நிறுத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை விட அது தணிந்து, ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்ட பிறகு நாடு எதிர்நோக்கும் பொருளாதார பிரச்னைகளே முக்கியமான பிரச்னையாக இருக்கும். பலர் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும். வறுமை கோட்டுக்கு கீழ் பலர் செல்வதை தடுப்பதுடன், அந்தப் பிரிவில் ஏற்கனவே உள்ளவர்களை கவனிக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது. பொருளாதார பாதிப்பு கடுமையாக இருக்கும் நிலையில், அது, கொரோனா சவாலைவிட மிகப் பெரிய சவாலாக இருக்கும்.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *