Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் கொரோனா வைரசால் அதிகரித்த உயிரிழப்பு

பிரான்சில் கொரோனா வைரசால் அதிகரித்த உயிரிழப்பு

சுகாதார இயக்குநர் ஜெனரல் ஜெரோம் சாலமன் அவர்களின் தினசரி அறிக்கை:

06/04/2020 இரவு 07:30 மணி: பிரான்சில் கிருமி பரவல் ஜனவரி தொடங்கியதிலிருந்து இறப்பு எண்ணிக்கை 8,911 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 74,390 ஆக உயர்ந்தது,

இன்று திங்கட்கிழமை மாலை, அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி கடந்த 24 மணி நேரத்தில் Île-de-France உட்பட 833 பேர் இறந்ததாகவும் 3,912பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்,

கிருமி பரவல் ஜனவரி தொடங்கியதிலிருந்து இறப்பு எண்ணிக்கை 8,911 ஆக உயர்ந்துள்ளது,கடுமையான தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் 7072 பேர் உள்ளனர். 24 மணி நேரத்தில் 478 பேர் அதிகம்,

பிரான்சில் இப்போது மருத்துவமனை தரவுகளின்படி 6,494 பேர் மருத்துவமனையில் மரணம் மற்றும் 24 மணி நேரத்தில் 605 பேர் இறந்துள்ளனர். (Ehpad) வயோதிப இல்லங்களைப்பொறுத்தவரை, தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இறப்பு 2,417 இறப்புகளை எட்டியுள்ளது.

தற்போது மொத்தமாக இறப்புக்களின் எண்ணிக்கை 8,911 மற்றும் 3,000ற்கு மேற்பட்ட (Ehpad) வயோதிப இல்லங்களில் 23,600 க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

அதேவேளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெறும் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை (கடந்த 24 மணிநேரத்தில் 831 பேர்) இப்போது 29,722 மற்றும் 17,250 பேர் முற்றாகக் குணமடைந்து வெளியேறியுள்ளனர் ( 24 மணி நேரத்தில் 1,133 ).

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *