Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்ஸ் Saint-Louis நகரபிதா ஜேர்மனி வைத்தியசாலையில் மரணம்!

பிரான்ஸ் Saint-Louis நகரபிதா ஜேர்மனி வைத்தியசாலையில் மரணம்!

கொரொனாத் தொற்றினால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் Haut-Rhin மகாணத்தின் Saint-Louis நகரத்தின் நகரபிதா Jean-Marie Zoellé (வயது 75) கொரொனோ வைரஸ் தாக்கத்தினால் மரணமடைந்துள்ளார்.

மிகவும் உயிராபத்தான நிலையில் ஜேர்மனியின் பொன் (BONN) நகர வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

COVID-19 தொற்றின் தீவிரத்தால் Mulhouseஇல் St. Petru வைத்தியசாலையின் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த 28ம் திகதி மார்ச் மாதம், ஜேர்மனிக்கு இடம் மாற்றப்பட்டிருந்தார்.

இவரின் இறப்பினை சுவிற்சர்லாந்தின் எல்லைப்பகுதியிலுள்ள Saint-Louis நகரசபை பெரும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளது. இவருக்கான மரியாதை வணக்க நிகழ்வு, நாட்டு நிலைமை சீரடைந்த பின்னர் மாநகரசபையில் நடாத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *