Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பாரிசில் காலை 10 மணியில் இருந்து மாலை 7 மணி வரை.. அமுலுக்கு வந்த புதிய தடை!

பாரிசில் காலை 10 மணியில் இருந்து மாலை 7 மணி வரை.. அமுலுக்கு வந்த புதிய தடை!

பாரிசில் வெளியே சென்று உடற்பயிற்சியில் ஈடுபட புதிய நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளிருப்பு சட்டம் நடைமுறையில் இருக்கும் போது, உடற்பயிற்சியில் ஈடுபட மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை பலர் தவறாக பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டு புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி, பாரிசில் காலை 10 மணியில் இருந்து மாலை 7 மணி வரை வெளியில் சென்று உடற்பயிற்சி மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 8 ஆம் திகதி ( நாளை) முதல் இந்த புதிய சட்டம் நடைமுறையில் இருக்கும். உடற்பயிற்சியில் ஈடுபட வெளியே செல்பவர்கள் காலை 10 மணிக்குள்ளாக வீட்டுக்கு திரும்பவேண்டும். தவறும் பட்சத்தில் அவர்களும் தண்டப்பணம் செலுத்த நேரும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, மாலை 7 மணிக்கு பின்னர் தான் வெளியே உடற்பயிற்சிக்காக செல்ல முடியும்

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *