Breaking News
Home / விளையாட்டு செய்திகள் / தொப்பியே தனக்கு நினைவுச் சின்னம் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங்.

தொப்பியே தனக்கு நினைவுச் சின்னம் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங்.

‘ஓய்வு பெற்றபோது வழங்கப்பட்ட தொப்பியே தனக்கு எப்போதும் விருப்பமான நினைவுச் சின்னம்’ என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங்.
அவுஸ்ரேலிய அணிக்காக 168 டெஸ்ட் போட்டிகளில் 41 சதங்களுடன் 13,378 ஓட்டங்களையும், 375 ஒரு நாள் போட்டிகளில் 30 சதங்களுடன் 13,704 ஓட்டங்களையும், 17 இருபது – 20 போட்டிகளில் 401ஓட்டங்களையும் பெற்றவர் ரிக்கி பொண்டிங்.

இருமுறை உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்தவர் ரிக்கி பொண்டிங்.இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு சர்வதேச துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றார். இதன் போது அவுஸ்ரேலிய துடுப்பாட்ட சபை அவரது மனைவியின் மூலம் தொப்பி ஒன்றை வழங்கியது.

இதனை அவர் தான் துடுப்பாட்டத்தில் அறிமுகமான சமயத்தில் பயன்படுத்திய தொப்பியின் அருகே வைத்துள்ளார். இந்த இரு தொப்பிளும் தனக்குப் பிடித்த நினைவுச் சின்னங்கள்.140 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்டால் ஒரு தொப்பி சற்று மோசமாக உள்ளது என கூறியுள்ளார் ரிக்கி பொண்டிங்.

Check Also

இந்திய துடுப்பாட்டப் போட்டி IPL நிறுத்தப்பட்டுள்ளது.

BCCI இந்த தலைவர் சவுரவ் கங்குலி இது பற்றி தெரிவிக்கையில் , கொரோனா தொற்று தொடர்பான நிலைமையை கவனத்தில் கொண்டே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *