Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் சுவாசக்கவசத்துடன் மருந்தகம் ஒன்றில் கொள்ளை.

பிரான்சில் சுவாசக்கவசத்துடன் மருந்தகம் ஒன்றில் கொள்ளை.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாதிருக்க சுவாசக்கவசத்தினை அணிந்து வரும்நிலையில், சுவாசக்கவசத்துடன் வந்து மருந்தகம் ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்டசம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

Masked thief in balaclava with crowbar isolated on white background

இது தொடர்பில் தெரியவருவதாவது, Saint-Ouen (93) பகுதியில் என்று  Marché des Puces de Saint-Ouen சொல்லப்படுகின்ற பகுதியில் 45, rue des Rosiers. அமைந்துள்ள மருத்தகம்ஒன்றில், மேலுடுப்புடன் கூடிய தொப்பியானல் தலையினை மூடியிருந்த நபர், சுவாசக்கவசத்தினை அணிந்து கொண்டு வரிசையில் காத்திருந்துள்ளார்.

சுகாதாரப் பாதுகாப்பு கருதி, ஒவ்வொருவராகவே மருந்தகத்துக்குள் அனுமதிக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், தனக்குரிய அழைப்பு வந்த போது, அதனை ஒரு வாய்ப்பாகபயன்படுத்திய நபர், கூரிய கத்தியொன்றினை காட்டி காசுப்பட்டறையினை திறக்குமாறுவெருட்டியுள்ளார்.

அண்ணளவாக காசுப்பட்டறையில் இருந்த 100 யுறோக்களை எடுத்துக்கொண்டுதப்பியோடியுள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *