Breaking News
Home / உலகம் / சீனாவில் நீண்ட முடக்கத்துக்கு பின்னர் வழமைக்குத் திரும்பிய வுகான்.

சீனாவில் நீண்ட முடக்கத்துக்கு பின்னர் வழமைக்குத் திரும்பிய வுகான்.

சீனாவின் பிரதான நகரங்களில் ஒன்றான வுஹான் நகரம் நீண்ட முடக்கத்துக்கு பின்னர்மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

உலகை ஆட்கொண்டு பல அழிவுகளை நிகழ்த்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின்ஹூபே மாகாணத்தில் தோற்றம் பெற்றதாக அறியப்படுகிறது.

அங்கு மிக பிரதான நகரங்களில் ஒன்றான வுஹான் நகரம் குறித்த வைரஸ் பரவளினால்பாரிய அழிவுகளுக்கு முகம் கொடுத்தமையினைத் தொடர்ந்து சீன அரசாங்கத்தால்குறித்த நகரம் முழுமையாக முடக்கப்பட்டது.

வெளி மாநிலங்களில் இருந்து மக்கள் யாரும் உல் செல்வதற்கோ உள்ளிருந்து யாரும்வெளியேறுவதற்கோ அனுமதி முற்றாக மறுக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 76 நாட்கள்மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலைக்குமுகம் கொடுத்து வந்த மக்கள் பட்டினி, மருத்துவ மற்றும் சுகாதார நெருக்கடி என பலஇன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவளின் வேகம்வெகுவாக குறைந்துள்ளது.

அதனடிப்படையில் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பியநாடுகளில் மரணித்து வரும் நிலையில் ஒற்றை இலக்கங்களிலான மரணங்கள் சீனாவில்தேசிய ரீதியாக பதிவாகி வருகின்றன.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *