Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் 6 ஆம் திகதி முதல் நாட்டிற்குள் நுழையும் யாராக அனுமதி படிவம் தேவை

பிரான்சில் 6 ஆம் திகதி முதல் நாட்டிற்குள் நுழையும் யாராக அனுமதி படிவம் தேவை

இனி புதிதாக நாட்டிற்குள் நுழைபவர்களுக்கு சர்வதேச பயண சான்றிதழ் மூலம் விதிகளைகடுமையாக்கியுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐரோப்பிய நாடுகள் பல, தங்களின் எல்லைகளைமூடியுள்ளன. ஆனால் பிரான்ஸ் அப்படி தன்னுடைய எல்லையை மூடவில்லை.இந்நிலையில் தற்போது ஏப்ரல் 6-ஆம், திகதி முதல் நாட்டிற்குள் நுழையும் யாராகஇருந்தாலும், அனுமதி படிவம் தேவை என்பதை கட்டாயமாக்கியுள்ளது.

பிரான்சிற்குள் பயணிக்க விரும்பும் எவரும் ஏற்கனவே கையொப்பம் இடப்பட்டு அதில்திகதி மற்றும் நேரம் கொண்ட சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அப்போது தான்அவர்கள் நுழைய முடியும்.

இது international travel certificate (சர்வதேச பயண சான்றிதழ்) என்று கூறப்படுகிறது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு இருக்கும் நிலையில், யார் எல்லாம் நாட்டின் உள்ளேஅனுமதிக்கபடுகிறார்கள் என்பதற்கான கடுமையான வரையறைகள் இதில்வகுக்கப்பட்டுள்ளது.

அதில் இருக்கும் முக்கிய குறிப்புகள்

•பிரான்சில் தங்களது முதன்மை குடியிருப்பு உள்ளவர்கள்.

•மூன்றாம் நாட்டு நாட்டினருக்கு விசா அல்லது இங்கு இருப்பதற்கான வீட்டின் அடையாளஅட்டையை வழங்க வேண்டும். இது ஐரோப்பிய ஒன்றிய மக்கள் மற்றும் பிரித்தானியமக்களுக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

•வேறொரு ஐரோப்பிய நாட்டில் நிரந்தர வீடுகளை கொண்டவர்கள், வீடு திரும்புவதற்காகபிரான்ஸ் வழியாக பயணம் செய்கிறார்கள்.

•கொரோனா வைரஸ் தொடர்பான பராமரிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள்.

•பார உந்து சாரதிகள் மற்றும் விமானம் அல்லது சரக்கு குழுக்கள்.

•எல்லை தாண்டிய தொழிலாளர்கள். (உதாரணமாக நீங்கள் பிரான்சில் வசிக்கிறீர்கள், ஆனால் சுவிட்சர்லாந்தில் பணிபுரிந்தால் நீங்கள் முன்னும், பின்னுமாக பயணிக்க முடியும்)

•பிரான்ஸ் குடிமக்களும் அவர்களது குழந்தைகளும் மீண்டும் நாட்டிற்குள்அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் வெளிநாட்டவர்கள் சில தேவையான சூழ்நிலைஎன்றால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

பிரான்ஸ் உள்துறை அமைச்சகம், ஊரடங்கு காலத்தில் பிரான்ஸ் அல்லது பிரித்தானியமக்கள் தங்களின் இரண்டாவது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

மேலும், பயணிகள் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தாலும், கடுமையாக தடைசெய்யப்பட்டசேவைகள் இருந்தபோதிலும், பிரான்சிற்கான விமானங்கள், தொடருந்துகள் மற்றும்படகுகள் இன்னும் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது,

படிவம்: https://www.interieur.gouv.fr/content/download/121915/978769/file/07-04-20-Attestation-etranger-metropole-FR.pdf

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *